என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பத்திரப்பதிவு துறை"
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மிகவும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.
ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த மாநிலங்களில் முறையே 59 சதவீதம், 56 சதவீதம் ஊழல் நிலவுவதாக கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரிய வந்துள்ளது. அடுத்தபடியாக 17 சதவீதம் ஊழல் காவல்துறையிலும், 15 சதவீதம் ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25 சதவீதம் ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் தேவையில்லை. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதை அத்துறையை அணுகியவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், ஊழலுக்கு ஆதரவாளர்களாக மாறி ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும், ஆதரிக்கவும் துடிப்பது தான்.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். அதனால் தான் தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
சாதிச்சான்று, பிறப்புச்சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின்இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும்.
பொது மக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப் படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ் களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும். ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட் டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இனியும் இத்தகைய சூழல் நிலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே, நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #pmk #RegistrationDepartment
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மூலம் https://tnreginet.gov.in என்ற இணையதளம் வழியாக பத்திரங்களை தயாரிக்கலாம் அல்லது தாங்களே சொந்தமாக பத்திரம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணச்சுருக்கத்தை உட்புகுத்தலாம். இதில் புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணை சேர்த்தால், அதனை சரிபார்த்து பதிவுத்துறை ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் ஆவணதாரர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும்.
பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும். நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் நிலை குறித்து ஆவணதாரருக்கு அனுப்பப்படும். இழப்பீடு தொகை கட்ட வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்களும், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த திட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.
பதிவு அலுவலர் பதிவு மறுப்பு சீட்டு வழங்காமல் வாய்மொழியாக பதிவை மறுக்கும் நிகழ்வுகளில் பதிவுத்துறை தலைவர் அலுவலக கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 102 5174 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்